மீண்டும் அதிகரித்த கொரோனா... 18 வயது பெண் திடீர் பலி - இறப்புக்கான அதிர்ச்சி காரணம்!
கொரோனா வைரஸ் தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பின் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக வைரஸ் பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகி வந்தது. இதனால் மக்கள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தனர்.
இதனிடையில் கடந்த நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது அடுத்த அலையின் தொடக்கமாக இருக்குமோ என ஆய்வாளர்கள் சந்தாகின்றனர்.
அதன்படி சென்னையில் ஒரே நாளில் 221 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு காரணமாக எந்தவித உயிரிழப்பும் பதிவாகாமல் இருந்தது.
இந்தச் சூழலில் கடந்த தினத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
மேலும் இவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து, கடும் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 18 வயது பெண் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை அளித்த பின்னர் மதியம் 2.30 மணிக்கு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் அதிகமாவதற்கு பிஏ4, பிஏ5 வகை வேரியண்ட் தான் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
முகக் கவசம் அணிவதும் , சமூக இடைவேளையை கடைபிடிப்பதும்தான். இதற்கு சரியான தீர்வு என்று மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த நாளின் படி நிலவரப்படி 1,938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 984 பேரும், செங்கல்பட்டில் 375 பேரும், கோவையில் 118 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.