முகத்தை மூடி தூங்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
பருவ கால மாற்றங்களில் குளிர்காலம் வந்து விட்டால் போர்வையும் கையுமாக இருப்பவர்கள் தான் அதிகம்.
என்ன தான் வேலை இருந்தாலும், ஒரு போர்வையுடன் சென்று அதனை செய்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம்.
இன்னும் சிலர் குளிர்காலங்களில் தலையுடன் போர்வையை போட்டுக் கொண்டு உறங்குவார்கள்.
இந்த பழக்கத்தினால் கூடுதல் அரவணைப்பு மற்றும் ஆறுதல் கிடைக்கும் என அப்படி தூங்குபவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த பழக்கத்தினால் நாளடைவில் சில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
முகத்தை மூடி தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்க் கொள்வார்கள் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

முகத்தை மூடி தூங்குவது சரியா?
1. முகத்தை மூடி தூங்கும் பொழுது தூக்கத்தின் தரம் குறையும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2. சிலருக்கு சுவாச அழுத்தம் ஏற்பட்டு மூச்சு திணறல் கூட ஏற்படலாம். குறிப்பாக, குழந்தைகள் இப்படி போர்வையை போட்டு தூங்கும் பொழுது அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும்.
3. நுரையீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் போர்வையை தலையுடன் போர்த்தி தூங்கக் கூடாது. இது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

4. போர்வை முகம் முழுவதும் இருந்தால் நீங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவு உயரும். அதே சமயம் நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவை குறையும். இதனால் சருமம் வெப்பம் அதிகரித்து உங்களுக்கு சுவாச பிரச்சினைகள் ஏற்படலாம்.
5. மோசமான தூக்கத்தை தூங்குபவர்களுக்கு இதய பாதிப்பு, மன அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.
இனி செய்யாதீர்கள்?
- தூங்கும் போது முடிந்தளவு போர்வையை முகத்தில் மூடாமல் இருப்பது சிறந்தது. இதனால் மூக்கடைப்புக்களில் இருந்து தப்பிக்கலாம். இப்படி செய்யும் பொழுது நீங்கள் வெளியேற்றும் கார்பன் டை ஆக்சைடை (CO2) வெளியில் சென்று, புதிய ஆக்ஸிஜன் வருகையால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

- ஆக்ஸிஜன் குறைவு காரணமாக ஏற்படும் சுவாசக் கோளாறுகள் குறையும். சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சில சமயங்களில் இப்படியான சிறு தவறுகளை தொடர்ந்து செய்துக் கொண்டிருக்கலாம்.
- நிம்மதியான தூக்கம் இல்லாதவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் தலைவலி, தலைச்சுற்றல், அமைதியற்ற தூக்கம் அல்லது புத்துணர்ச்சி இல்லாமல் இருக்கும். இதற்கான முக்கிய காரணம் இதுவாகவே இருக்கும். எனவே முடிந்தளவு போர்வையை உடலுக்கு மாத்திரம் போர்த்திக் கொள்வது சிறந்தது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |