கோவாக்ஷின் தடுப்பூசியில் கன்றுகுட்டியின் ரத்தமா? பின்னணி உண்மை அம்பலம்
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசி தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி மருந்தில் புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் ரத்தம் அடங்கி இருப்பதாக தகவல் ஒன்று பரவி மக்களிடையே பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் சார்பில் மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம், வெரோ செல்களை தயாரிப்பதற்கும் வளர்ப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
எருது போன்ற போவின் மற்றும் பிற விலங்குகளிடம் இருந்து வரும் சீரம், வெரோ செல் வளர்ச்சிக்கு உலக அளவில் பயன்படுத்தப்படுகிற நிலையான செறிவூட்டல் மூலப்பொருள் ஆகும்.
தடுப்பூசிகளின் உற்பத்திக்கு உதவும் செல்வாழ்க்கையை உருவாக்குவதற்கு வெரோ செல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
போலியோ, வெறிநாய்கடி மற்றும் இன்புளூவென்றா ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் இந்த தொழில்நுட்பம் வெகுகாலமாக பயன்படுத்தப்படுகிறது.
வளர்ந்த பின்னர் வெரோ செல்கள் தண்ணீரிலும், ரசாயன திரவங்களிலும் கழுவப்படுகின்றன. கன்றுக்குட்டியின் சீரத்தில் இருந்து விடுபடுவதற்காக இது செய்யப்படுகிறது.
பின்னர் வைரஸ் வளர்ச்சிக்காக வெரோ செல்கள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றன. வைரஸ் வளர்ச்சியின்போது, வெரோ செல்கள் முழுமையாய் அழிக்கப்படுகின்றன. அதன்பிறகு வளர்ந்த வைரசும் கொல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது.
அதன்பின்னர் கொல்லப்பட்ட அதாவது செயலிழந்த வைரஸ் பின்னர் இறுதியான தடுப்பூசி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
எனவே கோவேக்சின் தடுப்பூசியில் புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் இல்லை. இறுதித் தடுப்பூசியின் மூலப்பொருளாகவும் சீரம் இல்லை.