சக்கரை நோயாளருக்கு காரசாரமான கோவாக்காய் சாதம் எப்படி செய்யலாம்?
சக்கரை நோயாளர்கள் சில உணவுகளை உண்ணக்கூடாது என வைத்தியர்கள் வலியுறுத்துவார்கள். இந்த நேரத்தில் வாய்க்கு காரசாரமாக சாப்பிடுட தோனும் சமயத்தில் நாம் புதுவகையான உணவுகளை தேடி செல்வோம்.
அப்படியொரு உணவு தான் கோவாக்காய் சாதம். இது சக்கரை நோயாளர்களுக்கு மிஸகவும் நன்மை தரும்.
தேவையான பொருட்கள்
- கோவாக்காய்
- வெங்காயம் - 2
- கல் உப்பு - 2 ஸ்பூன்
- சீரகம் - 2 ஸ்பூன்
- தனியா - 2 ஸ்பூன்
- பூண்டு - 10 பல்
- மஞ்சள் - 1 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
- புளி - துண்டு
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடலை
- பருப்பு
- உழுத்தம் பருப்பு
- கடுகு
- சீரகம்
- சிவப்பு
- மிளகாய்
- பெருங்காயப்பொடி
- கறிவேப்பிலை
- அரிசி - 1 கப்
- நெய்
- கொத்தமல்லி இலை
செய்யும் முறை
முதலில் கோவாக்காயை சிறிது சிறியதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் கல் உப்பு சீரகம் தனியா பூண்டு மஞ்சள் சிவப்பு மிளகாய் பொடி புளி இதை அனைத்தையும் சேர்த்து ஒரு மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு உழுத்தம் பருப்பு கடுகு சீரகம் சிவப்பு மிளகாய் பெருங்காயப்பொடி கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் அரைத்த வெங்காய மசாலாவை சேர்த்து வெங்காயத்தின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்த கோவாக்காயை போட்டு வதக்க வேண்டும்.
இதனுடன் சாதத்தை சேர்த்து வதக்கி இறுதியாக கொத்தமல்லி இலையை போட்டு இறக்கினால் கோவாக்காய் சாதம் தயார்.