Viral video: பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி- காதலி செயலால் குழம்பி தருணம்
பர்சை எடுக்க குனிந்த காதலனுக்கு காதலி கொடுத்த இன்ப அதிர்ச்சி காணொளி இணையவாசிகள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
காதலர்களின் அலப்பறை
காலம் காலமாக காதலர்களின் அலப்பறை சமூக வலைத்தளங்களில் அதிகமாகி வருகிறது.
முன்பெல்லாம் காதலர்கள் தங்களின் காதலை பகிர்ந்து கொண்ட காணொளிகளை தான் அதிகமாக பகிர்வார்கள்.
இது அவர்களின் காதலின் வெளிபாடாக இணையவாசிகள் பார்த்தார்கள். ஆனால் தற்போது உள்ள காதலர்கள் தங்களுக்குள் நடக்கும் சண்டைகள், காதல் உணர்வு, முக்கியமான முடிவுகள் மற்றும் அலப்பறைகள் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில், காதல் ஜோடியொன்று அன்பை பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது, இளைஞன் தன்னுடைய பர்சை தவறுதலாக கீழே போட்டு விடுகிறார். அதனை எடுப்பதற்காக கீழே குனிந்து விட்டு, பர்சை எடுத்து கொண்டு நிமிரும் பொழுது அவருடைய காதலி ஒரு பாக்ஸை கையில் கொடுக்கிறார்.
என்னவாக இருக்கும் என குழம்பிய இளைஞன் மெதுவாக திறக்கும் பொழுது உள்ளே மோதிரம் இருப்பது தெரிகிறது. அப்போது ஆச்சர்யமாக பார்த்த காதலி அதனை எடுத்து அவருடைய கையில் போட்டுக் கொண்டார்.
காதலி என்ன செய்கிறார் என்று தெரியாத குழம்பிய இளைஞன் காதலி அனைத்த போது குழப்பத்துடனே இருக்கிறார். இந்த காணொளி இணையவாசிகள் மத்தியில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
இது போன்று காணொளிகள் பகிர்ந்து காதலர்கள் சமூக வலைத்தளங்களில் அலப்பறை செய்து வருகிறார்கள்.
— The King (@xxxxTheKing) May 21, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
