Tamizha Tamizha: பலமுறை உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற பெண்... தொகுப்பாளர் முன்பு உடைத்த உண்மை
தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்ற தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது.
தமிழா தமிழா
தற்போது ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் பிரபல ரிவியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று மற்றொரு ரிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதனை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியிலும் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில் இந்த வாரம் பல ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்ற தம்பதிகள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தவர்கள் சமூகத்தில் சந்தித்த கொடுமைகள், சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது.
"கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீங்க" - மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்
இதில் பெண் ஒருவர் தான் பல முறை உயிரை மாய்த்துக் கொள்ள சென்றதாக கூறியுள்ளார். 12 ஆண்டுகள் கழித்து குழந்தை கிடைத்துள்ளது தான் இப்போது சொர்க்கத்தில் உள்ளது போன்று உணர்ந்ததாக பெண் கூறியுள்ளார். .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |