குளியலறையில் திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர்..! என்ன காரணம் தெரியுமா?
அமெரிக்காவின் ஒரு தம்பதி தங்களது திருமணத்தை ஒரு பிரபல கடையின் குளியலறையில் நடத்தியுள்ளனர்.
ஒவ்வொரு நபருக்கும் தங்களின் திரமணம் குறித்து ஏறாளமான கனவுகள் இருக்கும். அப்படி ஒரு பெண் தன் திருமணத்தை தனது அலுவலகத்தின் குளியலறையில் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.
இவரது ஆசைக்கு இணக்கம் தெரிவித்த அவரது வருங்கால கணவர், குளியலறையில் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு பிரம்மாண்டமாக குறித்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
HOP ஷாப்ஸ் என்ற அந்த கடையின் குளியலறையில், டிஸ்கோ தீம் இருப்பதால் டியானா என்ற அந்த பெண்ணுக்கு இந்த இடத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தோன்றியுள்ளது.
திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்ட பலகையில், அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம் எனும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.
இருவரும் கோட் சூட், மணப்பெண் ஆடை அணிந்து தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்வதை போலவே அந்த குளியலறையில் மோதிரம் மாற்றி கொண்டுள்ளனர்.
வித்தியாசமான முறையில் இடம்பெற்ற இந்த திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.