உலகிலேயே அதிகமாக மது குடிக்கும் நாடு எது தெரியுமா?
உலக நாடுகளில் எந்த நாட்டு மக்கள் அதிகளவில் மது குடிக்கின்றனர் என்பதற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
மதுபானம்
மது அருந்துவது மக்களிடையே பரவலாக காணப்படும் ஒரு விடயமாகும். இது பழங்காலம் தொட்டு இருந்து வருகின்றது. மது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை என்றும் இதை குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்க்கும் என்பது ஒரு விழிப்புணர்வாகவே இருந்து வருகின்றது.
இந்த நிலையில், உலக நாடுகளில் எந்த நாட்டு மக்கள் அதிகளவில் மது குடித்து வருகிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் உந்த இடம் முதலிடத்தில் உள்ளது என்பதை பார்க்கலாம்.

முதலிடம் - உலகளவில் அதிக மது குடிக்கும் நாடுகளில் ரஷ்யா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த நாட்டு மக்கள் அதிகமாக மது குடிப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நபர் ஆண்டுக்கு சுமார் 16.8 லிட்டர் மதுபானம் குடிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஒட்கா அங்கு தேசிய பானமாக இருந்து வருகிறது. ஓட்கா குடிப்பது அவர்களது கலாச்சாரத்தில் ஒரு பங்காக உள்ளது. மேலும் பெரு நகரங்களில் பீர் விற்பனையும் அதிகளவில் இடம்பெறுமாம்.

ஏனைய நாடுகள் - அதிகம் மதுபானம் அருந்து நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருப்பது கிரீஸ் நாடு. இங்குள்ள தனிநபர் ஒருவர் ஆண்டுக்கு 14.5 லிட்டர் மதுபானம் குடிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிரீஸ் நாட்டில் மதுபானம் குடிப்பது அதன் பாரம்பரியாக இருக்கிறது. பொழுதுபோக்காக மது குடிப்பதை விட, கொண்டாட்டங்களுக்கு மது குடிப்பது இங்கு அதிகமாக காணப்படுகின்றது.

மூன்றாவது இடத்தில் ஆப்பிரிக்க நாடான லெசோதா. இது தென்னாபிரிக்காவில் உள்ளது. இங்குள்ள தனிநபர் ஒருவர் 12.9 லிட்டர் மதுபானம் குடிக்கின்றனர். மடகாஸ்டர்.
இங்கு தனிநபர் ஒருவர் 12.1 லிட்டர் மதுபானம் ஆண்டுக்கு குடித்து வருகிறார். அதிலும் கரும்பு மூலம் தயாரிக்கப்படும் பீரை இங்குள்ள மக்கள் அதிகம் குடிக்கின்றனராம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |