Countries with no river : ஆறுகள் இல்லாத நாடு இங்கு குடிநீர் எப்படி கிடைக்கிறது?
உலகிலேயே ஆறுகள் இல்லாத நாடுகளின் முழு விபரம் இணையத்தில் வெளியாகி வருகின்றது. இந்த நாடுகளில் குடிநீர் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை.
ஆறுகள் இல்லாத நாடுகள்
இந்த உலகத்தில் வாழும் அத்தனை உயிரினங்களுக்கும் தண்ணீர் என்பது முக்கியம். ஆறுகள், ஏரிகள், குளங்கள் போதுமான அளவில் உள்ள நாடுகளில் குடிநீருக்காக மக்கள் பெரும் கஷ்டப்படுவார்கள். ஈனால் நதிகள் இல்லாத 8 நாடுகளில் மக்கள் தண்ணீருக்கு கஷடப்படவில்லை.
சவூதி அரேபியா
அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள சவுதி அரேபியா, ஆறுகள் இல்லாத மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும். இந்த நாட்டில் மைல் கணக்கில் பாலைவனம் உள்ளது. இருந்தாலும் இங்குள்ள அரசு நீர் மேலாண்மைக்கு சிறப்பான முறைகளை வகுத்துள்ளது. இந்த நாடு கடல் நீரை குடிநீராக மாற்றுகிறது. 70 சதவீத குடிநீர் உப்புநீக்கம் மூலம் கிடைக்கிறது. மேலும், இங்கு ஒரு முறை பயன்படுத்தப்பட்ட நீர், சுத்தீகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
கத்தார்
இது ஒரு பணக்கார நாடாகும். நாடும் கடல் நீரை சுத்தம் செய்துதான் குடிநீராக பயன்படுத்தி வருகிறது. கத்தார் உலகிலேயே அதிக தனிநபர் நீர் நுகர்வைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இங்குள்ள குடிநீர் 99 சதவீதம் உப்பு நீக்கம் மூலம் கிடைக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
துபாய், அபுதாபி போன்ற உலகின் பணக்கார மற்றும் பிரபலமான நகரங்கள் இந்த நாட்டில் உள்ளன. நூற்றுக்கணக்கான கோடீஸ்வரர்கள் இங்கு வாழ்கிறார்கள் என கூறப்படுகின்றது. ஆனால் இந்த நாட்டில் நதிகள் இல்லை.
இதனால் கடல் நீரை சுத்தீகரித்து மட்டுமே குடிநீர் தயாரிக்கப்படுகிறது. இது தவிர இங்குள்ள தொழிற்சாலைகளில் அழுக்கு நீர் சுத்தம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
குவைத்
அரேபிய வளைகுடாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள குவைத் நாட்டிலும் ஆறுகள் இல்லை. இங்கும் கடல் நீர் சுத்தீகரிக்கப்பட்டு, குடிநீராக மாற்றப்படுகிறது. மற்ற நாடுகளைப் போலவே, இங்கும் உப்புநீக்கம் செய்யப்படுகிறது.
மாலத்தீவுகள்
இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்ட சுற்றுலாவை முழுமையாகச் சார்ந்திருக்கும் ஒரு நாடு தான் மாலத்தீவுகள். இந்த நாட்டில் ஒரு நதி கூட இல்லை. இது மற்றைய அரபு நாடுகளைப் போல் வளம் நிறைந்ததாக காணப்படாது.
இதனால் இங்கு குடிநீர் சேகரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் குடிநீருக்கு அவஸ்தைபடுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |