லாரியின் முன் பக்கத்தில் இவ்வாறு 2 கம்பிகள் எதற்காக இருக்குதுன்னு தெரியுமா?
பொதுவாகவே நாம் தினசரி காண்கின்ற பல விடயங்களுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் குறித்து நாம் ஆராய்வது கிடையாது.ஆனால் இவற்றுக்கு பின்னால் வியப்பூட்டும் அறிவியல் ஒன்று நிச்சயம் இருக்கத்தான் செய்கின்றது.
நாம் மேலோட்டமாக பார்க்கும் போது வெறுமனே அழங்காரத்துக்காக வைக்கப்பட்டிருப்பது போன்று தோன்றினால் இதற்கான உண்மை காரணத்தை தெரிந்துக்கொள்ள முயற்சித்தீர்களானால் இது நிச்சயம் உங்னகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
அந்த வகையில் நாம் அன்றாடம் வீதிகளில் காண்கின்ற லாரிகளில் முன்பக்கத்தில் இரண்டு புறமும் இரண்டு கம்பிகள் பொருத்தப்பட்டிருப்பதை அனைவருமே அவதானித்திருப்போம்.
இந்த கம்பிகள் ஏன் பொருத்தப்பட்டிருக்கின்றது என்பது குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது அழங்காரத்துக்காக பொருத்தப்பட்டிருப்பதாகவே நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றோம். அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
பொதுவாக லாரிகள் நகரும்போது இந்த கம்பிகள் அதிர்வடைகின்றன. ஆனால், இந்த கம்பிகள் வாகனத்தின் பாதுகாப்போடு தொடர்புடையது என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
இந்த கம்பிகள் எதற்காக என்ற கேள்வி பலருக்கும் இருக்ககூடும்.Tata Elxsi நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக இருக்கும் யசாஷ் ஷெட்டி என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்னரே இது குறித்து இணையத்தில் முழுமையான விளக்கமளித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், லாரிகளின் வலது மற்றும் இடது புறங்களில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கம்பிகள் மார்க்கர் என்று அழைக்கப்படுகின்றது.
இது கம்பிகளின் தொழில் என்னவென்றால் சாரதி லாரியை மிகவும் குறுகலான இடத்ங்களில் செலுத்தும் போது அல்லது லாரியை திருப்பும் சமயங்களில் இந்த மார்க்கர் கம்பிகள் சாரதிக்கு உதவுவதாக குறிப்பிடுகின்றார்.
மார்க்கர் கம்பிகள் இருபுறத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் இடித்தால், வாகனம் அடிபடாமல் இயக்குவதற்கு இந்த மார்க்கர் பொரிதும் துணைப்புரிகின்றது.
மார்க்கர் கம்பிகளை தனியாக இணையதளங்களிலும் கொள்வனவு செய்ய முடியும்.லாரிகள் மற்றும் பிற வாகன உதிரிபாக கடைகளிலும் அதனை பெற்றுக்கொள்ளலாம். இந்த மார்க்கர் கம்பிகள், கார் பம்பர் கார்னல் ஆண்டெனா போல் போன்ற பிற பெயர்களில் மற்ற வாகனங்களிலும் காணப்படுகின்றது.
கார்களுக்கும் இந்த மார்க்கர் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மார்க்கர் கம்பியின் விலை மிகவும் குறைவாகத்ததான் இருக்கும் ஆனால் இந்த கம்பிகள் கொடுக்கும் பாதுகாப்பு அளப்பரியது.
Nipah Virus symptoms: நிபா வைரஸ் எப்படி பரவுகின்றது? இந்த அறிகுறிகள் இருந்தால் அலச்சியப்படுத்தாதீங்க...
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |