உலகின் வேகமான பாம்புகள்.. மின்னல் வேகத்தில் இரையை துரத்திக் கொல்லுமாம்
உலகில் வேகமான பாம்பு மற்றும் தனது இரையை வேட்டையாட எந்த வேகத்தில் ஓடுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அச்சுறுத்தும் பாம்புகள்
பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆம் உலகின் ஆபத்தான உயிரிழனங்களில் ஒன்று தான் பாம்பு.
உலகம் முழுவதும் சுமார் 3500 மேற்பட்ட வகையான பாம்புகள் உள்ள நிலையில், இவற்றில் 25 சதவீதம் மட்டுமே விஷம் கொண்டவை. இதில் ராஜநாகம் என்பது மிகவும் கொடிய விஷம் கொண்ட பாம்பாக இருக்கின்றது.
குறித்த பாம்புகள் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. ஆம் தனக்கு தேவையான இரையை வேட்டையாடுவதில் இதன் வேகம் என்பது வேற லெவல் என்றே கூற வேண்டும்.
வேகமாக வேட்டையாடும் பாம்புகள் எது?
Sidewinder rattlesnake இரையை அதிவேகமாக துரத்தும் பாம்பாக கருதப்படுகின்றது. இது மணிக்கு சுமார் 29 கிலோமீற்றர் வேகத்தில் தனது இரையை துரத்துவதுடன், தனித்துவமான முறையிலேயே இது நகருமாம். இவை பெரும்பாலும் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க தென்மேற்கின் பாலைவனப் பகுதிகளில் காணப்படுகின்றன.
இரையை வேகமாக தேடும் வகையில் இரண்டாவது இடத்தில் சாரப்பாம்பு. இவை நாகப்பாம்பு போன்று விஷத்தன்மை கொண்டதல்ல... ஆனால் வினாடிக்கு 2.67 மீட்டர் வேகத்தில் பாய்கிறது. இந்த பாம்புக்கு எப்பொழுது பசி எடுத்தாலும் உடனே தன் இரையைக் கொன்றுவிடுமாம்.
அமெரிக்காவில் பெரும்பாலும் காணப்படும் பஞ்சுவார்ய் விரியன் பாம்பு இரையை வேட்டையாடுவதில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. வினாடிக்கு 2 மீட்டருக்கும் மேல் வேகத்தில் பாய்ந்து தனது இரையை அடைவதுடன், 6 அடிக்கும் மேலான தூரத்தை நொடியில் கடந்துவிடும். மேலும் தான் கடித்த இரை இறக்கும் வரை காத்திருந்து பின்பு இரையாக்கிக் கொள்ளுமாம்.
உலகின் மிக நீளமான மற்றும் விஷத்தன்மை கொண்ட பாம்பு என்றால் ராஜநாகம். வினாடிக்கு 3.33 மீட்டர் வேகத்தில் இரையை துரத்துவதுடன், அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு என்பதால் கடித்த அரை மணி நேரத்தில் மனிதர்கள் உயிர் பிரிந்து விடுமாம்.
தண்ணீரில் வேகமாக செல்லும் மஞ்சள் வயிற்று கடல் பாம்பு தண்ணீரில் மணிக்கு 4 கிலோ மீட்டர் வெகத்தில் ஓடக்கூடியதாகவும், தரையில் மணிக்கு 15 கிலோ மீட்டர் ஓடக் கூடியதாகும். இவை பெரும்பாலும் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வாழும் பாம்புகள் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை.
உலகின் அதிவேக விஷமற்ற பாம்பு சதர்ன் பிளாக் ரேசர் என்பதாகும். இவை மணிக்கு 12.87 கிலோ மீ்ட்டர் வேகத்தில் இரையை துரத்துவதுடன், அதனை கீழே இழுத்து மூச்சுத் திணற வைத்து கொல்லும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |