சாதாரண ஜலதோஷ வைரஸாக மாறவிருக்கும் கொரோனா: உலக மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி
உலக நாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மூன்றாவது அலையில் சில நாடுகளில் தீவிரமாகவே பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
முதலாவதாக அமெரிக்காவில் 4 கோடியே 51 பேருக்கு மேலாக தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 கோடியே 41 லட்சத்திற்கு மேலானோர் குணமாகி வீடு திரும்பியதுடன், தற்போதைய சிகிச்சையில் 98 லட்சத்திற்கும் மேலானோர் இருந்து வரும் நிலையில், இதுவரை 7 லட்சத்து 33 ஆயிரம் பேர் இந்த கொள்ளை நோய்க்கு பலியாகியுள்ளனர்.
கொரோனா பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3 கோடியே 39 பேருக்கு மேலாக தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 கோடியே 32 லட்சத்திற்கு மேலானோர் குணமாகி வீடு திரும்பியதுடன், தற்போதைய சிகிச்சையில் 2 லட்சத்திற்கும் மேலானோர் இருந்து வரும் நிலையில், இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த கொள்ளை நோய்க்கு பலியாகியுள்ளனர்.
தற்போது பெரும்பாலான நாடுகள் கொரோனா 3வது அலையிலிருந்து தப்பிப்பதற்கு தடுப்பூசி செலுத்துவதற்கு, தீவிரம் காட்டி வருவதுடன், பல வெளிநாடுகள் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் 18வயதிற்கு மேற்பட்டோரிலிருந்து தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்ட நிலையில், தீவிரமாக மக்களும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில், இங்கிலாந்து தேசிய சுகாதார சேவையின் முன்னாள் தலைவர் சர் மால்கம் கிராண்ட் பங்கேற்று கொரோனா குறித்து பேசியுள்ளார்.
இவர் கூறுகையில், குறித்த கொரோனா வைரஸ் தொற்று சாதாரண ஜலதோஷ வைரஸ் போன்று மாறிவிடும் என்றும் ஆனால் இதற்கு இன்னும் நீண்ட காலம் எடுக்கும்... தற்போது கொரோனா குறித்து பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டிருக்கும் நாம், இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
தற்போதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக இருந்து, அமெரிக்கா, ஐரோப்பாவில் இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
