பேசினால் கொரோனா பரவுமாம்... வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பேசினாலே கொரோனா நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுகைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மினால், இருமினால் அவரது எச்சில் காற்றில் கலப்பதன் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு கொரோனா பரவும்.
அதுபோல பேசும் போதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எச்சில் துகள்கள் வெளியில் வந்தால், அது காற்றில் கலந்து 2 மீற்றர் தொலைவு வரை கொரோனா தொற்றைப் பரப்ப வாய்ப்புகள் உள்ளது.
அதிலும் ஏரோசோல் என்ற எச்சில் துகள்கள் காற்றில் கலந்தால் 10 மீற்றர் வரை கொரோனா தொற்றைப் பரப்பும். இந்த ஏரோசோல் எச்சிலில் கொரோனா தொற்று அதிக நேரம் உயிருடன் இருக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே தொற்று பரவல் அதிகளவில் இருக்கவும் வாய்ப்புள்ளது.
ஒரே அரையில் பலர், ஏசி அரைகள், பொது இடங்களில் ஏரோசோல் என்ற எச்சில் துகள்கள் பரவினால் தொற்று அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
எனவே எப்போதும் மாஸ்க் அணிவது, வெளியில் சென்று வந்தால் கைகளை நன்கு சோப்பு போட்டுக் கழுவது, வெளியில் செல்லும் போது அவ்வப்போது சானிடைசர் போட்டு கைகளை கழுவுவது தொற்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவை கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும்.