கொரோனா தடுப்பூசி போட வந்த இடத்தில் ஏற்பட்ட காதல்: தாத்தா, பாட்டி செய்த காரியம்
கொரோனா தடுப்பூசி போட வந்த இடத்தில் முதியவர்களுக்கு காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியை அடுத்த காக்கநாடு பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ்(73). இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகளுக்கும் திருமணம் செய்து தனியாக வசித்து வருகின்றனர்.
கடந்த வாரம் கொரோனா பரிசோதனை முகாமுக்கு வர்கீஸ் சென்றபோது, அங்கு அதே பகுதியை சேர்ந்த அஸ்வதி(68) என்ற பாட்டியை சந்தித்துள்ளார்.
அஸ்வதிக்கும் திருமணமாகி அவரின் கணவர் சமீபத்தில் இறந்துள்ள நிலையில், தனது மகளும் திருமணமாகி தனியாக சென்றுவிட்டதாகவும், தான் தனிமையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இருவரும் அந்த கொரானா மையத்தில் சந்தித்து பேசி, தங்களின் தனிமையின் கொடுமையில் தவிப்பதை பற்றி கூறிய போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, தங்கள் பிள்ளைகளிடம் கூறவே அவர்களும் இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வர்கீஸ்-அஸ்வதி திருமணம் நேற்று முன்தினம் கொச்சியில் எளிமையாக நடந்தது. இருவரின் மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகள் முன்னிலையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.