ஒரே நாளில் 9,284 பேருக்கு பரவிய கொரோனா.. 361 பேர் பலி! திணறி வரும் நாடு
கொரோனா வைரஸ் உலக அளவில் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இதுவரை உலக அளவில் 12.40 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 27.30 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. மேலும், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9,284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 44,66,153 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மேலும் 361 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 391 ஆக உயர்ந்துள்ளது.