கொரோனாவிலிருந்து மீண்டு மகளுடன் நடந்து சென்ற தாய்... 2 மணிநேரம் கழித்து அலங்கோலமாக கிடந்த அவலம்
கொரோனாவிலிருந்து மீண்டு வீட்டிற்கு நடந்து சென்ற பெண்ணை வன்கொடுமை செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் சரைடியோ மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் தாய், மகள் இருவருக்கும் மட்டும் காய்ச்சல் அதிகரித்ததால் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மற்ற நபர்கள் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழனன்று, தாய், மகள் இருவரும் கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் இரவு 7.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மருத்துவமனையிலிருந்து இவர்கள் கிராமத்திற்கு செல்வதற்கு 25 கி.மீ தொலைவு என்பதால் ஆம்புலன்ஸ் சேவை கேட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணத்தினைக் கோரி ஆம்புலன்ஸ் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் 40 வயது பெண் தனது மகளுடன் நடந்தே கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த வேலையில், இவர்களை இரண்டு இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.
இருவரும் பயந்து ஓட்டம் பிடித்த நிலையில், தாய் மட்டும் இளைஞர்களிடம் மாட்டிக்கொள்ள சிறுமி ஊருக்குள் சென்று கிராமத்தினரிடம் கோரியுள்ளார். அதற்கு இரண்டு இளைஞர்களும் பெண்ணின் தாயை வன்கொடுமை செய்துள்ளனர்.
கிராம மக்களுடன் சிறுமி தனது தாயை தேடி அலைந்த நிலையில் இரண்டு மணி நேரம் கழித்து அவரைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, குறித்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோருக்கும் ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.