4 மணி நேரமாக ஆம்புலன்சில் காத்திருந்து உயிரிழந்த இளைஞர்... மக்களை நடுங்க வைத்த புகைப்படங்கள்
மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் 34 வயது இளைஞர் ஒருவர் அம்புலன்ஸிலையே மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆனால் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் அந்த இளைஞர் சுமார் 4 மணி நேரமாக ஆம்புலன்சிலையே காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆம்புலன்சில் அவருக்கு செலுத்தப்பட்ட ஆக்சிஜன் தீர்ந்தால் அந்த இளைஞர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

