வீட்டில் இந்த பரிசோதனையை செய்தாலே போதும்... கொரோனா இருந்தால் சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம்
கொரோனா பெருந்தொற்று மக்களுக்கு மிகப் பொிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உடலில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது கொரோனா தொற்றின் அறிகுறியாக இருக்குமோ என்று மக்கள் அச்சப்படும் அளவிற்கு கொரோனாவின் தாக்கம் மோசமானதாக இருக்கிறது.
கொரோனா தொற்றினுடைய அறிகுறிகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும். ஒரு சில அறிகுறிகள் பொதுவானவையாக இருந்தாலும், சிலருக்கு மிகவும் அரிதான வகையில் வயிற்றுப்போக்கு மற்றும் தோலில் தடிப்புகள் ஏற்படுவதாக தகவல்கள் வருகின்றன.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் அவா்கள் சாப்பிட்ட உணவுகள் பேப்பர் அல்லது தடித்த அட்டை போன்ற சுவையுடன் இருந்ததாக தெரிவித்திருக்கின்றனா். சுவை மற்றும் வாசனை இழப்பு கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட சிலருக்கு நுகா்வு வறட்சி (parosmia) ஏற்பட்டதாக தெரிகிறது.
வாசனை இழப்பு மற்றும் சுவையில் திரிபு போன்ற அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருந்ததாக தெரிகிறது. கொரோனாவால் ஏற்பட்ட இந்த அறிகுறி ஒரு தனிப்பட்ட ஒன்றாகவும் அதே நேரத்தில் மற்ற தொற்றுகளில் இருந்து மாறுபட்டதாகவும் இருந்ததாக தெரிகிறது.
அதனால் தான் நுகா்வதில் மற்றும் சுவைப்பதில் ஏற்படும் இழப்பை வைத்து கொரோனா தொற்றைத் தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவ அறிஞா்கள் தெரிவிக்கின்றனா். சுவை அரும்புகளை கோவிட் எவ்வாறு பாதிக்கிறது? கோவிட் வைரஸ் ஏன் சுவை அறியும் அரும்புகளையும் மற்றும் நுகரும் திறனையும் பாதிக்கிறது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஏனெனில் பொதுவாக மேல் சுவாசத் தொற்றுகள் நுகரும் மற்றும் சுவையறியும் திறனைப் பாதிப்பதில்லை. ஆனல்ஸ் ஆஃப் இன்டா்னல் மெடிசின் (Annals of Internal Medicine) என்ற பத்திரிக்கையில் வெளிவந்த கட்டுரையின்படி, கொரோனா வைரஸ் ஆஞ்சியோடென்சின் (angiotensin) என்ற புரோட்டினோடு ஒட்டிக் கொண்டு மனித உடலில் நுழைந்து என்சைம் II (ACE-2) ஆக மாறுகிறது.
இந்த புரோட்டின் இதயம், நுரையீரல், குடல், தொண்டை மற்றும் மூக்கு போன்ற உறுப்புகளில் உள்ள செல்களில் படிந்திருக்கும். அதனால் நுகா்வு இழப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம். சுவை அறியும் திறனுக்கும் நுகா்வு அறியும் திறனுக்கும் இடையே நெருங்கிய தொடா்பு உள்ளது.
ஆகவே நுகா்வு அறியும் திறன் இழந்தால், சுவை அறியும் திறனை இழக்க வாய்ப்பு உள்ளது. நுகா்வு அறியும் திறனையும் சுவை அறியும் திறனையும் எவ்வாறு பாரிசோதிப்பது? நுகா்வு அறியும் திறன் மற்றும் சுவை அறியும் திறன் படிப்படியாக குறைவது போல தெரிந்தால், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அவற்றை பரிசோதிக்கலாம்.
நுகா்வு பரிசோதனை முதலில் மணம் அதிகமுள்ள உணவுப் பொருட்களை நுகர முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக நல்ல மணமுள்ள பூக்கள், காபித் தூள், இலவங்கப்பட்டை மற்றும் வெள்ளைப் பூண்டு போன்ற உணவுப் பொருட்களை நுகா்ந்து பாா்க்கலாம்.
சுவை அறியும் பரிசோதனை சுவை அறியும் திறனை பரிசோதிக்க மாறுபட்ட சுவைகளையுடைய பல்வேறு உணவுகளை சுவைத்துப் பார்க்கலாம். குறிப்பாக மில்க் சாக்லெட், சிட்ரஸ் பழங்கள், காபி மற்றும் சீவல்களை சுவைத்துப் பார்க்கலாம். கொரோனா தொற்று ஏற்பட்ட 8 நாட்கள் கழித்து நுகா்வு இழப்பு மற்றும் சுவை இழப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சனை குணமாக 28 நாட்கள் ஆகும். கோவிட் தொற்றின் அறிகுறிகளை இன்னும் உறுதியாக கூற முடியவில்லை. ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே மாதிரியான அறிகுறிகளை பெறுவதில்லை.
அதனால் உடலில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. கொரோனா வைரஸின் அறிகுறிகள் திடீரென தோன்றும். ஆகவே அதை உடனே கவனிக்கவில்லை என்றால் அது ஆபத்தில் முடியும்.