தமிழகத்தில் ஒரே நாளில் 1636 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கை
கொரோனா வைரஸ் உலகமெங்கும் மீண்டும் பரவி வரும் நேரத்தில், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை விடுத்த எச்சரிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், மாநிலத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரத்து 440-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 633 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவில் இருந்து இன்று 1,023-பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரொனாவால் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆகும். தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 80,634- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.