கொரோனா பாதித்தவர் இறந்ததால் ஆத்திரத்தில் மருத்துவரை தாக்கிய உறவினர்கள்! பேரதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்
அசாம் மருத்துவர் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் குறித்து இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் தலைவர் ஜே.ஏ.ஜெயலால் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் உழைத்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தையும் மறந்து இரவு பகலாக நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
இவ்வாறு, கரோனா முன்களப்பணியாளர்களில் முதன்மையானவர்களாக விளங்கும் மருத்துவர்கள் மீது நாட்டின் பல்வேறுபகுதிகளில் தாக்குதல் நடத்தப்படுவது வேதனையளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்களால் மருத்துவர்கள் அச்சத்திலும், கவலையிலும் ஆழந்துள்ளனர்.
அசாமில் மருத்துவர் மீது நோயாளிகளின் உறவினர் கள் தாக்குதல் நடத்தியதை ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், மருத்துவர்களின் நலன் பாதுகாக்கப்படுவதை நம்மால் உறுதி செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.