வெறும் 5 நாட்களில் 242 குழந்தைகளுக்கு கொரோனா: சில நாட்களில் 3 மடங்கு அதிகமாகும்! எச்சரிப்பு தகவல்
பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களில் மட்டும் 242க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது... இது கர்நாடகாவில் பெரும் கலக்கத்தை தந்து வருகிறது.
இந்தியாவில் முதலாவது அலை கொரோனா பரவலைவிட, 2வது அலை பரவல் அதிகமானது.. இதனால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம்.
இந்த 2வது அலை பரவல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தாக்கும் வீரியம் கொண்டதாக உள்ளது.. எனவேதான் தடுப்பூசி விஷயத்தில் அந்தந்த மாநில அரசுகள் கறார் தன்மையையும், தீவிரத்தையும் காட்டியது..
இந்நிலையில், தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மீண்டும் பெங்களூருவில் அதிகரிக்க தொடங்கியுள்ளது... இதற்கு நடுவில் 3வது அலை பரவல் வரப்போவதாக தகவல்கள் வருவதால் அம்மாநில மக்கள் கலங்கி உள்ளனர். இந்த 3வது அலை குழந்தைகளையும் தாக்கும் என்று டாக்டர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்..
எனவேதான், குழந்தைகளுக்கான ஸ்பெஷல் கொரோனா வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன... பெங்களூரு நகரில் கடந்த 5 நாட்களில் 19 வயதுக்கு உட்பட 242 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.. அதேபோல, 3வது அலை தொடங்கிவிட்டதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்...
அதுமட்டுமல்ல, இந்த கடந்த 5 நாட்களில் தொற்று உறுதியானவர்களில் 106 குழந்தைகள் 9 வயதுக்கும் குறைவானவர்கள், 136 குழந்தைகள் 9 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்தானாம்.. குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுவது வருங்காலங்களில் அதிகரிக்க கூடும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் இந்த எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளதாம்.. இப்போதைக்கு குழந்தைகளை இந்த வைரசிடம் இருந்து பாதுகாப்பதுதான் முக்கிய கடமையாக பெங்களூருவில் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது...ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பாதிநேர ஊரடங்கை விதிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.