கொத்தமல்லி சட்னியை இந்த முறையில் செஞ்சு பாருங்க... சுவை அட்டகாசமாக இருக்கும்
பொதுவாக கொத்தமல்லி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, அதன் தோற்றத்தையும் சிறப்பானதாக்குகிறது.
பச்சை கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த சத்துக்கள் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தமல்லியை வைத்து எவ்வாறு சுவை நிறைந்த கொத்தமல்லி சட்னி தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி - 1/4 கட்டு
எண்ணெய் - 2 தே.கரண்டி
வரமிளகாய் - 4
இஞ்சி - 2 துண்டுகள்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
சீரகம் - 1/4 தே.கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை காம்புடன் சேர்த்து, உப்பி வரும் அளவில் வறுத்து, தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில் இஞ்சி துண்டுகளை சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கி, அதையும் மிளகாயுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் உள்ள எண்ணெயில் கொத்தமல்லியை சேர்த்து லேசாக சுருங்க ஆரம்பிக்கும் வரையில் வதக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் முதலில் வரமிளகாய் மற்றும் இஞ்சியை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றான அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லியை சேர்த்து லேசாக அரைத்து எடுத்து, ஒரு கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்தால் மணமணக்கும் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |