சர்ச்சைக்கு பின் சாதித்தாரா? ஷங்கர் மகள் அதிதி! காதலை கூறி பரபரப்பை கிளப்பிய காமெடி நடிகர்
தமிழ் சினிமாவில், விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர். மருத்துவ படிப்பை முடித்த இவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவரின் பாடிய மதுர வீரன் பாடலுக்கு பல சர்ச்சைகள் கிளம்பி ஓய்ததது. அதன் பின் ஷங்கர் மகள் என்பதால் தான் உடனே வந்துவிட்டார் என பல நடிகைகள் குற்றம் சாட்ட அதற்கும் பதிலடி தரும் விதமாக அதிதி நடித்தும் தன் திறமையால் தான் வந்தேன் எனவும் கூறியிருந்தார்.
விருமன் நேற்று உலகமெங்கும் ரிலீசானது. கார்த்திக்கு ஜோடியாக தேன்மொழி எனும் கிராமத்து பெண் கேரக்டரில் நடித்திருந்தார் அதிதி. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது.

கலக்கிய அதிதி
ஆனாலும், இப்படத்தை பார்த்த பெரும்பாலானோர் அதிதியின் நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளனர். முதல் படத்திலேயே மகளின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவதால் இயக்குனர் ஷங்கரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளாராம்.

காதலை கூறிய நடிகர்
இந்நிலையில், பல படங்களில் நகைச்சுவையாக நடித்த கூல் சுரேஷ், நேற்று விருமன் படத்தின் முதல் காட்சியை பார்த்த பின்னர், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதியை காதலிப்பதாக கூறி பேட்டி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எந்த படம் பார்த்தாலும், வெளியேவந்து எதையாவது பேசும் கூல் சுரேஷை பேட்டி எடுப்பதற்கு என்றே யூடியூப் கூட்டங்கள் அலைமோதும், அப்படி இந்த படத்திற்கு பற்றி கூல் சுரேஷ் பேசுகையில், காதலிப்பதாகவும், டு தன்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளும் படியும் இயக்குனர் ஷங்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் கூல் சுரேஷ்.
இப்படி காமெடியாக பேசிய அவரின் காணொளி இணையத்தில் வைரலாக நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர்.