குடித்துவிட்டு வண்டி ஓட்டினாரா? கூல் சுரேஷிடம் மன்னிப்பு கேட்ட சிவாங்கி
நடிகர் கூல் சுரேஷ் சிவாங்கியை நடுரோட்டில் நிறுத்திவைத்து பட ப்ரொமோஷனுக்காக செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை சிவாங்கி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் சிவாங்கி. இந்நிகழ்ச்சியில் பாடகியாக அறிமுகமான இவருக்கு தற்போது அடுத்தடுத்து பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் முதல் மூன்று சீசன்களில் கோமாளியாகவும் கலக்கினார். குறித்த நிகழ்ச்சியின் 2வது சீசனில் சிறப்பு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயனுடன், பணியாற்ற ஆசைப்படுவதாக கூறிய சிவாங்கிக்கு, உடனே டான் படத்தின் மூலம் சினிமாவில் சிவகார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார்.
இப்படம் வெற்றியானதால் இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், கண்ணன் இயக்கிய காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
காரில் வந்து கொண்டிருந்த சிவாங்கி
இந்நிலையில் சிவாங்கி காரில் வந்து கொண்டிருந்த நேரத்தில், நடிகர் கூல் சுரேஷ் அவரை மடக்கி பிடித்து டேமேஜ் செய்துள்ளார்.
சினிமா வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த கூல் சுரேஷ் தற்போது படவாய்ப்பு குவிந்து வரும் நிலையில், தற்போது டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் இன்று வெளியான நிலையில், இதற்காக ப்ரொமோஷன் வேலையில் சில தினங்களுக்கு முன்பு ஈடுபட்டிருந்தார். அப்பொழுது காரில் சீட் பெல்ட் அணியாத சிவாங்கியை மடக்கிபிடித்து மன்னிப்பு கேட்கக் கூறினார்.
பதறிப்போன சிவாங்கி ஒருவழியாக எஸ்கேப் ஆகிய போது, மீண்டும் அவரிடம் சென்ற கூல் சுரேஷ் டிடி ரிட்டர்ன்ஸ் பட போஸ்டரை காட்டி டிடி-னா டிரிங் அண்ட் டிரைவ், குடிச்சிட்டு வண்டி ஓட்டாத சிவாங்கினு சொல்லி நடுரோட்டில் டேமேஜ் செய்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |