ஷோவ ஷோவா மட்டும் பாருங்க! சர்ச்சைகளுக்கு வித்யு லேகா கொடுத்த அதிரடி விளக்கம்
அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த வாரம் தொடங்கப்பட்டது.
இதில் குக்குகளாக- அந்தோணிதாசன், கிரேஸ் கருணாஸ், மனோபாலா, சந்தோஷ் பிரதாப்,ரோஷினி என்று பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளாராக வித்யூலேகா கலந்து கொண்டிருக்கிறார்.

முதல் எபிசோடிலேயே நடுவர்களிடம் நல்ல பெயரை வாங்கி இருந்தார். மேலும், நடிகை வித்யுலேகா பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார்.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம்“ படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா. அதன் பின்னர் பல்வேரு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் வித்யு லேகா ரசிகர்களுக் ஓர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
100% இந்த நிகழ்ச்சியில் நான் நானாக தான் இருக்கிறேன்.
இதை ஒரு காமெடி நிகழ்ச்சியாக மட்டும் பாருங்கள். நீங்கள் சிரிக்க வேண்டும் என்று மட்டும்தான் அனைத்தையும் செய்கிறோம்.
இதில் யாரையும் நிஜமாக அடிப்பது கிடையாது எல்லாம் சவுண்ட் எபெக்ட் தான் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் இவருக்கு திருமணமும் முடிந்தது. குக்கு வித் கோமாளி சீசன் 3 ஆரம்பித்த முதல் வாரத்திலேயே பல பஞ்சாயத்து ஆரம்பித்து. அதிலும் இந்த சீசனில் கோமாளியாக இருக்கும் பரத் காமெடி என்ற பெயரில் பலரை கடுப்பேற்றி வருகிறார்.
அதே போல நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பத், இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை காமெடி என்ற பெயரில் பலமாக அடித்தவிடுகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்தது. அதற்கு பதில் கொடுக்கும் விதமாக தான் இந்த பதிவு இருக்கின்றது.