CWC 6: கண் ஜாடை காட்டி ராஜு.. போட்டுக் கொடுத்த சபானா- உடனே ஆக்சன் எடுத்த செப்
குக் வித் கோமாளியில் கண் ஜாடையால் கோமாளியை செட் பண்ணிய ராஜுவை சபானா போட்டுக் கொடுத்துள்ளார்.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஆறாவது சீசனில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் சின்னத்திரை பிரபலங்களான பிரியா ராமன், சபானா, ராஜு, உமைர், சுனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கோமாளிகளாக புதிய பிரபலங்களும் சிலர் களமிறங்கியுள்ளனர்.
சமையலை எப்படி நகைச்சுவையுடனும், விருப்பதுடனும் செய்யலாம் என்பதை கருவாகக் கொண்டு நகர்த்தப்படும் இந்த ஷோவின் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
போட்டுக் கொடுத்த சபானா
இந்த நிலையில், ஆறாவது சீசனில் முக்கிய குக்குகளில் ஒருவராக இருக்கும் நடிகை சபானா ஒரு முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். சமைக்க ஆரம்பிக்கும் முன்னர் சின்னத்திரை பிரபலமான ராஜு, சர்ஜனை பார்த்து கண் ஜாடை காட்டியதாக கூறியுள்ளார்.
இதனை கவனித்த சபானா ஓபனாக கூறிய வேளையில், அதற்கு ராஜு என்ன நடந்தது என்பதை செய்து காட்டி செப்பிற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதே சமயம், படையப்பா திரைப்பட கதாபாத்திரங்களாக இந்த வாரம் கோமாளிகள் மாறியுள்ளனர். அவர்களும் நகைச்சுவையை போட்டு நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்தி வருகிறார்கள்.
குக்கள் இரண்டு அணிகளாக பிரித்து சமையல் போட்டிகள் நடக்கின்றன. இந்த வாரம் சில பிரபலங்கள் வெளியேறுவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
