CWC 6: சர்ஜனை சரமாரியாக திட்டிய சபானா.. கடுப்பான கோமாளி- பழிவாங்க என்ன செய்தார்?
நிகழ்ச்சியில், இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கால் சௌந்தர்யாவிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ள வேளையில் சபானா மன்னிப்பு கேட்காத காரணத்தால் சர்ஜன் பார்த்த வேலை கவலையடைய செய்துள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஆறாவது சீசனில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் சின்னத்திரை பிரபலங்களான பிரியா ராமன், சபானா, ராஜு, உமைர், சுனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கோமாளிகளாக புதிய பிரபலங்களும் சிலர் களமிறங்கியுள்ளனர்.
சமையலை எப்படி நகைச்சுவையுடனும், விருப்பதுடனும் செய்யலாம் என்பதை கருவாகக் கொண்டு நகர்த்தப்படும் இந்த ஷோவின் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
பழிவாங்கிய சர்ஜன்
இந்த நிலையில், ஆறாவது சீசனில் முக்கிய குக்குகளில் ஒருவராக இருக்கும் நடிகை சபானாக்கு சர்ஜன் தான் கோமாளியாக வந்துள்ளார். வந்தவர் சமைக்க உதவிச் செய்யாமல் சமைத்த உணவில் உப்பை அள்ளிக் கொட்டியுள்ளார்.
உள்ளே இருக்கும் சபானா தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் உப்பை அள்ளிக் கொட்டி விடுவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாரும் எதிர்பாராத வகையில் உணவில் உப்பு கொட்டப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த சபானா மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறார். கடந்த வாரங்களில் நன்றாக சமைத்து பாராட்டுக்களை குவித்த சபானாவிற்கு இதுவொரு டுவிஸ்ட்டாக மாறியுள்ளது.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |