குக் வித் கோமாளியின் வின்னர் யார்? வெளியே லீக்காகிய தகவல்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது சீசன் 4 நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குக்கு வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. முதல் மூன்று சீசன் முடிந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகின்றது.
முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டில் வின்னர்களாகினர். தற்போது 4வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்து வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் முதல் ஆளாக விசித்ரா பைனல்ஸ் சென்றுள்ள நிலையில், அடுத்ததாக சிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி, கிரண் ஆகியோர் சென்றுள்ளனர்.
தொடர்ந்து வைல்டு கார்டு சுற்றில் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் போட்டியிட்டு இதில் ஆண்ட்ரியன் ஆறாவது பைனலிஸ்டாக நுழைந்துள்ளார்.
வெற்றியாளர் யார்?
இந்நிலையில் போட்டியின் கடைசி நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாகவும், இதன் வெற்றியாளரை ரகசியமாக வைத்துள்ளார்களாம். இருந்தாலும் வெளியே சிறிய தகவல் ஒன்று லீக்காகி உள்ளது.
ஆம் சிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் இருவரில் ஒருவர் இந்த சீசனில் வெற்றியாளராக இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.
ஏனெனில் இருவரும் நன்றாக சமைப்பவர்கள் என்பதால், நிச்சயம் இருவரில் ஒருவர் வெற்றியாளராவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட சிவாங்கி வெற்றி பெறாமல் இருந்த நிலையில், தற்போது இந்த போட்டியில் வெற்றிபெற்றால் அவரது கனவு நனவாகிவிடுவதாக கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |