CWC 6: அரிவாளுடன் வந்து குக்குகளை மிரள விட்டு புகழ்- 90 நிமிடத்தில் டாஸ்க்கை முடித்தவர் யார்?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அரிவாளுடன் உள்ளே வந்து டாஸ்க்கில் கலந்து கொண்ட புகழை பார்த்து மற்ற போட்டியாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.
குத் வித் கோமாளி- 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தன்னுடைய 5 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
வழக்கமாக குத் வித் கோமாளி நிகழ்ச்சியிலுள்ள புகழ், குரேஷி, ராமர் மற்றும் சுனிதா இருக்கிறார்கள்.
இவர்களை தவிர்த்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரபலங்கள் அனைவரும் புது முகங்களாக இருக்கிறார்கள்.
அந்த வகையில், பிக் பாஸ் செளந்தர்யா, இன்ஸ்டா பிரபலம் சர்ஜின் குமார், கானா பாடகர் பூவையார் மற்றும் டோலி ஆகியோர் இணைந்துள்ளனர். மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு நடுவராக இருந்து வரும் நிலையில், அவர்களுடன் புது நடுவராக செஃப் கெளஷி இணைந்துள்ளார்.
அதே போன்று குக்குகளாக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை பிரியா ராமன், அமரன் படத்தில் நடித்த உமர் லத்தீப், செம்பருத்தி தொடர் நாயகி ஷபானா, விவசாயி நந்த குமார், நடிகை ஜாங்கிரி மதுமிதா, மெரீனா கடற்கரை சுந்தரி அக்கா, யூடியூப் பிரபலம் செளந்தர்யா சில்லுகுரி, பிக் பாஸ் பிரபலம் ராஜு, நடிகர் கஞ்சா கறுப்பு ஆகியோர் களமிறங்கியிருக்கிறார்.
வெற்றிப் பெற்ற போட்டியாளர்கள்
இந்த நிலையில், கடந்த வாரம் குத் வித் கோமாளி சீசன் 6 வெற்றிகரமாக ஆரம்பமாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது போட்டிகள் ஆரம்பமாகியுள்ளதால், இந்த வாரம் ஒவ்வொரு இடங்களில் பிரபலமாக இருக்கும் உணவுகளை 90 நிமிடங்கள் சமைக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பிரபலமான கோமாளியாக இருக்கும் புகழ் அரிவாளுடன் வந்து புதிய குக்குகளை மிரள வைத்துள்ளார். அதே சமயம், முதல் போட்டியில் வெற்றிப் பெற்ற குக்குகள் இந்த வாரம் வெற்றிப் பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |