Cooking Tips: இல்லத்தரசிகளுக்கான பயனுள்ள சமையல் குறிப்புகள்
இல்லத்தரசிகளுக்கான மிகவும் பயனுள்ள சமையல் குறிப்புகள்,
1. சர்க்கரை பொங்கல் செய்யும் போது அரை கப் தேங்காய் பால் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
2. எந்தவொரு இனிப்பாக இருந்தாலும் சிறிதளவு உப்பு சேர்த்தால் கூடுதல் சுவை தரும்.
3. ரசத்துக்கு தாளிக்கும் பொழுது சிறிது நெய்யில் கடுகுடன் 4, 5 முழு மிளகையும் சேர்த்து தாளித்தால் ரசம் மணத்துடன் இருக்கும்.
4. மீதமான தேங்காய் துருவலை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. தோசை மாவில் சிறிதளவு சீரகத்தை கைகளால் தேய்த்து போட்டால் மணமாக இருக்கும்.
6. உளுந்து வடைக்கான மாவில் சிறிதளவு உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து போட்டால் எண்ணெய் குடிக்காமல் வரும், சுவையும் வித்தியாசமாக இருக்கும்.
7. வடைக்கு மாவு அரைக்கும்போது நீர் சிறிது அதிகமாகி விட்டால், ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விடவும். மாவு இறுகி விடும்.
8. ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.
9. மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
10. எலுமிச்சை சாதம் செய்யும் முன், வடித்த சாதத்தை பெரிய பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிளறி ஆறவைத்த பின்னர் செய்தால் உதிரி உதிரியாக இருக்கும்.
11. வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.
12. காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைத்தால், விட்டமின் சத்துகள் போய்விடும்.
13. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
14. குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.
15. கிராம்பை தண்ணீரில் உரசி, முகப்பரு உள்ள இடத்தில் தடவினால் பரு மறைந்து விடும்.