குக் வித் கோமாளியில் 2வது பரிசு இத்தனை லட்சமா? இதுவரை இல்லாத தொகை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்று வருகிறது.
மூன்றாவது சீஸனின் இறுதிப்போட்டி இன்று விஜய் டிவியில் 5 மணிநேரம் ஒளிபரப்பானது.
குக் வித் கோமாளி சீசன் 3 டைட்டில் வின்னர் மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா.

இந்த நிலையில் இரண்டாம் இடத்தினை தர்ஷன் பெற்றுள்ளார். அவருக்கு 3 லட்சம் பரிசு கிடைத்திருக்கின்றது.
மேலும், மூன்றாவது இடத்தினை அம்மு அபிராமி பெற்றுள்ளார். அவருக்கு பணத் தொகை எதுவும் வழங்க வில்லை என்றாலும் பரிசு வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து இறுதி போட்டிக்கு சமைத்த 6 குக்குகளுக்கும் பதக்கங்கள் கொடுத்து கௌரவிக்கப்பட்டது. இந்த நிலையில் அனைவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.