குக் வித் கோமாளிகள் செய்த கடலை பொடி பீன்ஸ் பொரியல் Sunday breakfast இப்படி செய்ங்க!
பீன்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். இதில் அதிக நார்ச்சத்து காணப்படுகிறது. இந்த காரணத்தினால் இது குடல் இயக்கத்திற்கு மிகவும் நன்மை தருகிறது.
செரிமாப்பிரச்சனை இருப்பவர்கள் இந்த பீன்ஸை அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் இருக்கும் கால்சியம், பாஸ்பேட் மற்றும் வைட்டமின் கே நிறைந்த பீன்ஸ் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். சிறுவயது குழந்தைகளுக்கு பீன்ஸ் உண்ண கொடுப்பது மிகவும் முக்கியமாகும்.
ஆனால் அனேகமான குழந்தைகள் பீன்ஸ் சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இந்த முறையில் இந்த பீன்ஸ் ரெசிபியை செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- சீரகம் – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- கடலை பருப்பு – கால் ஸ்புன்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பெரிய வெங்காயம் – 1
- பீன்ஸ் – ஒன்றரை கப் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கியது)
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- வரமிளகாய் – 2
- வறுத்த வேர்க்கடலை – அரை கப்
- தேங்காய் துருவல் – கால் கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் வரமிளகாய், வேர்க்கடலை மற்றும் தேங்காய் துருவல் மூன்றையும் ட்ரையாக வறுத்துக்கொள்ளவேண்டும். இதன் பின்னர் இதை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் கடுகு, உளுந்து, சீரகம் மற்றும் கடலை பருப்பு சேர்த்து நன்றாக பொறியவிட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
இதன் பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அது பொன்னிறமாக வந்தவுடன் பீன்ஸ், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக வதங்கவிடவேண்டும். இதன் பினனர் அரைத்து வைத்துள்ள அந்த பொடியை சேர்க்க வேண்டும். இதன் பின்னர் சாம்பார், ரசம் மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |