இரண்டு முறை திருமணம் எதற்காக? புகழ் உடைத்த உண்மை! மூன்றாவது திருமணம் செய்வாராம்!
குக் வித் கோமாளி புகழ் திருமணம் கடந்த செப்டம்பர் 1ம்தேதி நடைபெற்ற நிலையில், தான் எதற்காக இரண்டு முறை செய்தேன் என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
குக் வித் கோமாளி புகழ்
கடந்த 1ம் தேதி தனது காதலியை விநாயகர் கோவில் முன்பு திருமணம் செய்துகொண்ட புகழை, நடிகர்கள் சமுத்திரகனி, சசி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஆனால், இதற்கு முன்பே ஒரு வருடத்திற்கு முன்பு நடிகர் புகழுக்கும் அவரது காதலி பென்ஸியாவுக்கும் பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல்கள் போட்டோ ஆதாரத்துடன் வெளியாகின.

இரண்டு முறை திருமணம் ஏன்?
இந்நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் புகழ் போட்டோவுடன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. "என் தந்தை அன்பிற்கு ஒரு முறை... என் தாய் அன்பிற்கு ஒரு முறை...
என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை... வேறு அன்பு உள்ளங்கள் ஆசை பட்டால் மேலும் ஒரு முறை தயார் .
இந்தியனாக இருக்கிறேன் எல்லா புகழும் இறைவனுக்கே!" என மனைவியின் குடும்பத்தார் விருப்பத்திற்காக இன்னொரு முறையும் திருமணம் செய்து கொண்ட போட்டோவை ஷேர் செய்துள்ளார்.