குக் வித் கோமாளி பார்த்து குழந்தை பிறந்தது உண்மை தான்! வைரலாகும் உருக்கமான பதிவு
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்த்து தனக்கு குழந்தை பிறந்ததாக தன்னிடம் பெண் ஒருவர் கூறியதாக செப் வெங்கடேஷ் பட் கூற மீம்ஸ்கள் பறக்கத் தொடங்கின.
மனிதநேயம் செத்துவிட்டது
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில், “இரண்டு நாள்கள் நிஜமாகவே உடைந்து போனேன். கவலையாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ததால் கவலைப்படவில்லை. மனிதநேயம் செத்துவிட்டதாக மீம்ஸ்கள் என்னை உணர வைத்தது. எது வேண்டுமானாலும் சாகலாம் ஆனால் மனிதாபிமானம் இல்லை.

கடவுள் இருக்கார்ர குமாரு. மேலும், நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கிறார்கள். கீழே உள்ள படம் இப்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.
உண்மையான தகவலே
ஆனால் அது முழுக்க முழுக்க உண்மை என தெரியவந்துள்ளது, அந்த நபர் தனது சமூக வலைத்தளத்தில் நானும் என் மனைவியும் பத்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தோம். அதன்பிறகு டாக்டரின் அறிவுரைப்படி IVF சிகிச்சை எடுத்துக் கொண்டோம்.
அப்போது டாக்டர் கூறிய ஒரே விஷயம் பாசிட்டிவ் ஆக இருக்கவேண்டும், முடிந்தவரை நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், அப்போது தான் குழந்தை நன்றாக வளரும் என்று கூறினார்.
இதற்காக நான் என் மனைவியை கூடுதல் கவனத்தோடு பார்த்துக் கொண்டேன். அவருடைய ஒரே பொழுதுபோக்காக டிவி பார்ப்பது என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க கூறினேன். வெங்கடேஷ் பட் சார் சொன்னது எந்த அளவு உண்மை என்று எனக்கு தெரியாது, அதை பற்றி நான் பேசவும் விரும்பவில்லை.
ஆனால் என் மனைவிக்கு மன அழுத்தம் இருந்த போது அதை போக்கிய ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

எனக்கு தெரிந்து உடலுறவுக்கும் கருத்தரித்தலுக்கும் உடல் வலிமையை விட மன வலிமை மிகவும் அவசியம். அந்த மனவலிமை, மனம் சந்தோஷமாக இருந்தால் மட்டுமே கிடைக்கும்.
மனதை சந்தோசமாக வைத்து கொள்ளாமல் மன அழுத்தத்துடன் இருந்தால் குழந்தை பிறக்காது என்பதை எனது அனுபவத்தில் சொல்கிறேன்’ என்று கூறியுள்ளார்.