மனித நேயம் செத்துவிட்டது... குக்வித் கோமாளி நடுவர் வெங்கடேஷ் பட் கதறல்!
பிரபலமான விஜய் டிவி தொலைக்காட்சியில் பலவிதமான ஷோக்கள், சீரியல்கள் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில், ஒன்று தான் குக்வித் கோமாளி நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
எந்த அளவிற்கு என்றால் பிக்பாஸ் நிகழ்ச்சியையே டிஆர்பியில் தாண்டிய அளவிற்கு விறுவிறுப்பாக 3 வது சீசன் சென்றுகொண்டிருக்கிறது. இறுதிக்கட்டத்தை நெறுங்கியுள்ள இந்நிகழ்ச்சியில், விரைவில் இந்நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற உள்ளது.
ட்ரோல் செய்தவர்களுக்கு பதிலடி
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து ஒரு தம்பதிக்கு குழந்தை பிறந்தது என தெரிவித்தார். வெங்கடேஷ் பட் கூறியது நெட்டிசன்களால் ட்ரோல் மீம்ஸ்களாக பரவத்தொடங்கியது.
இந்தச் சூழலில் வெங்கடேஷ் பட் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், “இரண்டு நாள்கள் நிஜமாகவே உடைந்து போனேன். கவலையாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ததால் கவலைப்படவில்லை. மனிதநேயம் செத்துவிட்டதாக மீம்ஸ்கள் என்னை உணர வைத்தது. எது வேண்டுமானாலும் சாகலாம் ஆனால் மனிதாபிமானம் இல்லை.
கடவுள் இருக்கார்ர குமாரு. மேலும், நல்லவர்கள் இன்னும் இவ்வுலகில் இருக்கிறார்கள். கீழே உள்ள படம் இப்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி...
குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே தெரியும் அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று. குழந்தை இல்லாதவர்களை யோசித்து பாருங்கள். என்னை கிண்டல் செய்கிறேன் என நினைத்து உங்களை நீங்களே தரம் தாழ்த்துக்கொள்ளாதீர்கள் என மீம்ஸ் க்ரியேட்டர்ஸிடம் கேட்டுக்கொள்கிறேன்.
எனக்கும் மனம் முடிந்து 7 ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை. ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமானதை நான் உணர்ந்தவன்” என தெரிவித்துள்ளார்.