முதல் நாளே தெறிக்கவிட்ட ஜிபி முத்து! பதறிய குக் வித் கோமாளி பிரபலங்கள்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி ஆகும்.
குக் வித் கோமாளி
பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட இந்நிகழ்ச்சியினை மக்கள் அதிகமாக விரும்புவதற்கு காரணம் இதில் அரங்கேறும் கொமடிகள் தான். இந்நிலையில் இதுவரை குக் வித் கோமாளி மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது சீசன் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சமையலில் அசத்தும் போட்டியாளர்களாக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷிவாங்கி, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், நடிகை விசித்ரா, ஆன்ட்ரின் நௌரிகட் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர் கலக்க இருக்கின்றனர்.
இன்று முதல் நாள் நிகழ்ச்சியில் ஜிபி முத்து ஆரம்பத்திலேயே அமர்க்களம் செய்துள்ளார். ஆம் ஜிபி முத்து சுட்டு வைத்திருந்த முறுக்கை புகழ் திருடி சென்றுவிட குக் வித் கோமாளி செட்டையே ரணகளமாக்கியுள்ளார்.