முதல் முறையாக தன்னுடைய கணவர் குறித்து மனந்திறந்த குக் வித் கோமாளி பிரபலம்! ஷாக்கான நெட்டிசன்கள்..
தன்னுடைய கணவர் குறித்து முதல் முறையாக சமூக வலைத்தளங்களில் முன்னாள் நடிகையும் குக் வித் கோமாளியின் முக்கிய போட்டியாளருமான ஸ்ருதிகா பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
குக் வித் கோமாளி ஷோ
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் கலகலப்பாகச் செல்லும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இதில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் தங்களின் நகைச்சுவை திறமையால் மக்களை என்டடைம் செய்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
பிக் பாஸ் போன்று இந்த நிகழ்ச்சியும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளரான ஸ்ருதிகா குக் வித் கோமாளி சீசன் 3ல் ஆரம்பத்திலிருந்து சமையல் செய்து அசத்தி வருகிறார்.
இவர் ஷோவில் மட்டுமன்றி செட்டிலும் மிகவும் துறுதுறுவாக இருப்பாராம், இது போன்று இருப்பதால் இவர் பலரையும் கவர்ந்து வருகிறார். தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3 ன் டைட்டில் வின்னராக வலம் வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்கள் மற்றும் பிரபல தொலைக்காட்சியில் பல பேட்டி நிகழ்ச்சிகள், வீடியோக்கள் பகிர்ந்துக் கொண்டு வருகிறார்கள்.
கணவர் குறித்து ஓபனாக பேசிய ஸ்ருதிகா
அந்த வகையில் தன்னுடைய கல்யாண நாளை முன்னிட்டு, திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளார். மேலும் இவரின் கணவர் குறித்து பல இடங்களில் பெறுமையாக பேசியுள்ளார் ஸ்ருதிகா.
அதில், , “திருமண நாளிலிருந்து இத்தனை வருடங்கள் ஆகியும் என்னுள் இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வந்து, என்னை போலவே எனக்கான காதலை வெளிப்படுத்திக் கொண்டு, எனக்கான நம்பிக்கையை நாளுக்கு நாள் தந்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், இவர் தான் என்னுடை முதுகெலும்பு, என்னுடைய வலிமையான தூண். அவர் கொடுத்த வாக்குறுதிக்கு உண்மையாக வாழ்கிறார்” எனவும் மனஉருகி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஸ்ருதிகாவிற்கு இவருடைய கணவர் மீது இவ்வளவு காதலா? என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார்கள்.