குக் வித் கோமாளி அஸ்வினுக்கு இரண்டு முறை வந்த கொரோனா... பட்ட அவஸ்தை இவ்வளவா?
குக் வித் கோமாளியில் பங்கேற்ற அஸ்வீனுக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்ட அனுபவத்தினைக் கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் அஸ்வீன். தற்போது வெப்சீரிஸ், படங்கள் என்று பிஸியாக இருக்கும் இவருக்கு இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாம்.
கடந்த வரும் நவம்பர் மாதம் இறுதியில், வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாம். வாசனை மற்றும் சுவை இரண்டினை இழந்த இவருக்கு, இரண்டு தினங்களுக்கு பின்பு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. பின்பு சந்தேகப்பட்டு டெஸ்ட் மற்றும் ஸ்கேன் எடுத்து பார்த்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று தெரியவந்துள்ளது.
மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொண்டு தனிமையில் இருந்துள்ளார். மாத்திரை போடும் போதும், ஆவி பிடிக்கும் போதும் சற்று நன்றாக உணரும் அவருக்கு மாலைவேலையில் மீண்டும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களுக்கு பின்பு மீண்டு வந்துள்ளார்.

இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பில் இருந்த போது எல்லோருக்கும் எடுக்கும் போது அஸ்வினுக்கும் டெஸ்ட் எடுத்துள்ளனர். காலையில் படப்பிடிப்புக்கு தயாராகிய போது, தளத்திலிருந்து போன் வந்துள்ளது. உங்களுக்கு பாசிட்டிவ் என்றும் படப்பிடிப்பிற்கு வர வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
இதனை சற்றும் நம்பாத அஸ்வின் அவர்களிடம் தனக்கு தற்போது தான் கொரோனா வந்தது என்று வாக்குவாதமும் செய்துள்ளார். அதற்கு குழுவினர் டெஸ்ட் ரிப்போட்டில் அவ்வாறு தான் வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
அன்று முழுவதும் எங்கும் செல்லாத அஸ்வினுக்கு மறுநாள் மற்றொரு படப்பிடிப்பிற்கு டெஸ்ட் எடுத்துள்ளனர். அதிலும் பாசிட்டிவ் என்று வந்ததால் படப்பிடிப்பிற்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்ட அஸ்வினுக்கு மூன்று நாட்களுக்கு பின்பு தான் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. கொரோனா என்றாலே உடல்நிலை மிகவும் வீக் ஆகிவிட்டது என்று நினைத்த அவருக்கு மேலும் பயத்தில் இருந்துள்ளார்.

ஆனால் இந்த முறை வாசனை, சுவை இழப்பு ஏற்படாமல், மாலை வேலைகளில் தாங்கமுடியாத தலைவலியினை சந்தித்துள்ளார். பின்பு மருத்துவர் கூறிய மருந்தினை எடுத்துக்கொண்டு, ஆவிபிடித்து நாட்களை கடந்துள்ளார்.
மாலை 6 மணிக்கு பாடாய் படுத்தும் தலைவலி ஆரம்பமாகிவிடுமாம். இரவில் தூங்காமல் அவதிப்படுவாராம்... பின்பு பகலில் தூங்கி எழுந்து, இரவில் தலைவலியை தாங்கிக்கொள்ளமுடியாமல் ஒரு வழியாக 14 நாட்களை கடந்துள்ளார்.
பின்பு எடுத்துள்ள டெஸ்ட்டில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. ஆனால் உடம்புவலி, அசதி அதிகமாகவே இருந்துள்ளது. எப்பொழுது வேகமாக ஓட நடக்க என்று இருந்த அஸ்வினுக்கு, சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்கியதால், அப்பொழுதே இந்த வைரஸின் வீரியத்தினை தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அஸ்வினுக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்ட போது, அவரது பெற்றோர்கள் அவருடன் இல்லாமல் ஊருக்குச் சென்றுள்ளதால், பயமின்றி இருந்ததாக கூறியுள்ளார்.
இந்த கொரோனா காலத்தில் நமது உயிரை மட்டும் காப்பாற்றிக்கொள்வது என்று இல்லாமல், நம்மால் முடிந்த அளவிற்கு மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.

அதிலும் இந்த லாக்டவுன் காலத்தில் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் நபர்களை நினைத்து வேதனைப்படுவதாகவும், அவர்களுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு ஒருவேளை உணவு கொடுத்தால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று வேதனையோடு கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொண்டாலும், நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும், அதனால் தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து, மாஸ்க் அணிந்து கொண்டு நம்மால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தனக்கு இரண்டு முறை கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளேன்... எனக்கு தெரிந்தவர்களே தினமும் இறந்து போய்விடுகிறார்கள்... இன்று மட்டும் தனக்கு தெரிந்தவர்கள் நான்கு பேர் இறந்துள்ளனர்.
இன்று காலையில் இறந்த நண்பர், கீழே விழுந்து அடிப்பட்டதற்காக சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்கு சென்றவர், அங்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இறுதியில் நுரையீரல் பாதித்து இறந்தும் போய்விட்டார் என்று தனது வேதனையினை பகிர்ந்து மக்களை விழிப்புணர்வாக இருப்பதற்கு கோரிக்கை வைத்துள்ளார்.
