விஜய் பதவியேற்பு வழாவில் சர்ச்சை - குவிந்த கண்டனம் என்னாச்சு?
விஜய் பதவியேற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது.

தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிக்கட்சியாக வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவரான விஜய் இன்று முதல்வராக பதவி ஏற்றார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விஜயுடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பங்கேற்றனர் இன்று பதவி ஏற்றனர்.

சர்ச்சையான விடயம்
இந்த நிலையில் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து 3ம் இடத்தில் ஒலிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக மாநில நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வ மாநிலப் பாடல் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியில் இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கப்படுவது இது ஒரு மரபாக இருக்கிறது.

கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சியின் முதலில் தேசிய கீதம், அதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஆனால் அதனை முன்னால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையான எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
தான் பங்கேற்ற சட்டசபை நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

சில வெளிநிகழ்ச்சிகளில் ஆர்.என்.ரவி பங்கேற்றபோது அதனை திமுக அமைச்சர்கள் புறக்கணித்தனர். அந்த நிகழ்ச்சிகளில் முதலில் தேசிய கீதம் முதலில் ஒலிக்கப்பட்டது.
இந்த நிலையில் முதலமைச்சரின் விஜயின் முதல் நிகழ்ச்சிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு வந்தே மாதரம், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டப்பின் 3வது இடம் அளிக்கப்பட்டது பெரும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |