யூரிக் ஆசிட் பிரச்சனையா? இந்த 6 பழங்களை சாப்பிட மறக்காதீங்க
யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்கள் கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பழங்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக நமது உடலில் யூரிக் ஆசிட் அளவு சீராக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மூட்டு வலி வீக்கம், நடப்பதில் சிரமம், சிறுநீரக கற்கள், சோர்வு, பசியின்னை பிரச்சனை ஏற்படுகின்றது.
இத்தகைய சூழ்நிலையில், தற்போது கோடை காலம் என்பதால் உணவு பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உடல் விரைவாக நீரிழப்புக்கு ஆளாகிவிடும். இதனால் யூரிக் அமிலத்தின் அளவு மேலும் அதிகரிக்கும்.
இந்த சூழ்நிலையில் யூரிக் அமிலத்தின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும் பழங்களை கட்டாயம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்?
அதிக அளவு நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி பழத்தினை எடுத்துக் கொள்வதால், உடல் நீரேற்றமாக வைத்திருக்க உதவும். சிறுநீர் வழியாக யூரிக் அமிலத்தையும், உடலில் நச்சு நீக்கம் செய்யவும், உடல் குளிர்ச்சியை அளிக்கவும் உதவுகின்றது.
சிட்ரிக் அமிலம் உள்ள மாம்பழத்தினை நாம் எடுத்துக் கொள்ளலாம். இதனால் யூரிக் அமிலத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றது. ஆனால் யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழத்தினை குறைவாக சாப்பிட வேண்டும்.
ஆக்சிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் கொண்ட செர்ரி பழங்களை சாப்பிடுவதால் யூரிக் அமிலத்தை குறைக்க முடியும். மூட்டு வீக்கம், வலி இவற்றினை குறைப்பதற்கு தினமும் 10 அல்லது 12 செர்ரி பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.
நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்த வெள்ளரி மற்றும் முலாம்பழங்களை சாப்பிடுவதால், உடல் குளிர்வித்து சிறுநீர் வழியாக யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும். கோடை காலத்தில் இதனை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பப்பாளியில் இருக்கும் நொதிகள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்தி மூட்டுவலி மற்றும் வீக்கத்தை குறைக்கின்றது.
யூரிக் அமிலம் உடலில் இருந்து வெளியேறுவதற்கு கோடையில் அதிகமாக தண்ணீர் பருகுவதுடன், சர்க்கரை சேர்க்காமல் பழங்களை சாப்பிடவும் செய்யவும்.
மேலும் வறுத்த மற்றும் அதிக புரதம் கொண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பதுடன், தினமும் சற்று உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |