உணவில் வெண்ணெய் சேர்த்தால் உயிருக்கு ஆபத்தா? ஆய்வில் தெரியவந்த உண்மை
வெண்ணெய் ஆரோக்கியமான உணவாக கருதப்படும் போதிலும், அதன் அதிக பயன்பாடு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
கடந்த 33 ஆண்டுகளாக 2.21 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினமும் 10 கிராம் வெண்ணெய் உட்கொண்டால், இதய நோய்களின் அபாயம் 7% அதிகரிக்கும் என கண்டறிந்துள்ளனர். அதில் உள்ள லிப்போ புரோட்டீன்கள் மற்றும் தீங்கு தரும் கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
மாறாக, தாவர எண்ணெய்கள், ஆலிவ், சோயா, போன்றவை இதயநோயின் அபாயத்தை 6% குறைக்கும். இந்தியாவிலும் கடுகு எண்ணெய் போன்ற பசுமை வழிகளுக்கு முக்கியத்துவம் உள்ளது.
வெண்ணெய், இன்று கேக், பட்டர் நான், பட்டர் சிக்கன் போன்ற பல சமையல் வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நம் உணவில் வெண்ணெய் மறைவாக புகுந்து வருகிறது. அதேசமயம், சுத்தமானதாகும் என விளம்பரப்படுத்தப்படும் சூரியகாந்தி எண்ணெய்கள் கூட நச்சுக் கலவைகளை வெளியிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாற்றாக, இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வெண்ணெய் மட்டுமே பாதுகாப்பானது. மேலும், ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாமல், மாற்றிக் கொண்டே போதுமான அளவில் பயன்படுத்துவது உடல்நலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |