கட்டுக்கடங்காமல் கொட்டும் தலைமுடியும் ஏழு நாளில் வளரும் : வாரம் இருமுறை இந்த டீ குடிங்க
இன்றைய வேகமான வாழ்க்கைமுறையில் முடி உதிர்வு என்பது பல பெண்கள் (மற்றும் ஆண்களும்) சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக மாற்றியுள்ளது.
இதற்கு காரணமாகவே, வேதிப்பொருட்கள் நிரம்பிய ஹேர் பிராடக்ட்கள், தூய்மையில்லாத சுற்றுசூழல், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவை குறிப்பிடப்படுகின்றன.
இதற்கு சிறந்த வழியாக வாரத்தில் இரண்டு முறை இந்த டீ குடித்தால் போதும். அதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முடி உதிர்வை குறைக்கும் டீ
இஞ்சி டீ, ஏலக்காய் டீ போன்றவை உடலை புத்துணர்வாக வைத்திருக்கும். அதுபோலவே, சில டீ வகைகள் சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கும் இயற்கையான மருந்தாக பயன்படுகின்றன.
ஆனால் ரோஸ்மேரி டீ என்றாலே தலைமுடிக்கே நேரடி நன்மை.ரோஸ்மேரி என்பது மணமுள்ள ஒரு மூலிகைச் செடியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இது மருத்துவம் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியமான இடத்தைப் பிடித்து வருகிறது.
அந்த வரிசையில், ரோஸ்மேரி டீ தற்போது தலைமுடி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு ஒரு சக்திவாய்ந்த இயற்கை தீர்வாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கப் கொதிக்கும் நீரில் 1-2 டீஸ்பூன் உலர் ரோஸ்மேரி இலைகளை சேர்க்கவும். 5 - 10 நிமிடங்கள் இதை மூடி வைத்து விட்டு, பிறகு வடிகட்டி குடிக்கவும். இதை வாரத்தில் 3 அல்லது 4 முறை குடிக்கலாம்.
ரோஸ்மேரி டீயின் மருத்துவ நன்மைகள்: ஆண்டிஆக்ஸிடன்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் – தலையின் செல்கள் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகின்றன.
எரிச்சல் மற்றும் அழற்சி குறைக்கும் தன்மை – ஸ்கால்ப் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் – முடி வேர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சிறப்பாக செல்ல உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
