பிக்பாஸ் சீசன் 9 வீட்டில் அதிகம் சம்பாதித்த போட்டியாளர்கள் யார்?
பிக் பாஸ் வீட்டில் இருந்த போட்டியார்களில் மிகவும் அதிகமாக சம்பளம் வாங்கிய போட்டியாளர்கள் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
பிக் பாஸ் சீசன் 9
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நேற்று முடிவடைந்த நிலையில், போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சீசனில் அதிக லாபம் ஈட்டிய போட்டியாளராக டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த இவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 30,000 சம்பளம் பேசப்பட்டு, அவர் தங்கியிருந்த 80 நாட்களுக்கு சுமார் ரூ. 24 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை சம்பளமாகவும், டைட்டில் வின்னர் பரிசுத்தொகையான ரூ. 50 லட்சத்தில் வரி போக ரூ. 35 லட்சமும் கிடைத்துள்ளது.

இதன் மூலம் அவர் மொத்தமாக ரூ. 60 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, இறுதிப்போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு ரூ. 18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத் சுமார் ரூ. 20 லட்சம் வரை சம்பாதித்துள்ளார்.
இவருக்கு ஒரு நாளைக்கு ரூ. 8,000 சம்பளம் பேசப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த 100 நாட்களுக்கு ரூ. 8 லட்சம் சம்பளமும், பணப்பெட்டித் தொகையில் வரி போக மீதி தொகை அவருக்கு கிடைத்துள்ளது.
மற்ற போட்டியாளர்களை விட வைல்டு கார்டு மூலம் நுழைந்த பிரஜின் மற்றும் சாண்ட்ரா ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ. 30,000 வரை வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட போட்டியாளர்களான பிரவீன் காந்தி, அப்சரா, சபரி மற்றும் திவாகர் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரையிலும்,அரோரா மற்றும் வியானாவுக்கு ரூ. 12,000 வரை வழங்கப்பட்டுள்ளது.
கனி, எஃப் ஜே, துஷார் மற்றும் ஆதிரை ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 10,000 சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் பெரும் ஏமாற்றமாக, விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டு 'ரெட் கார்டு' பெற்று வெளியேற்றப்பட்ட விஜே பார்வதி மற்றும் கமருதீன் ஆகியோருக்கு பிக்பாஸ் ஒப்பந்த விதிகளின்படி ஊதியம் வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது.
அதேபோல், மிகக் குறுகிய காலத்திலேயே அதாவது மூன்று நாட்களில் வெளியேறிய நந்தினிக்கும் பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |