புரோட்டீன் அதிகம் எடுத்துக் கொண்டால் ஆபத்தா?
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக கருதப்படும் புரோட்டின் சத்துக்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் ஆபத்து ஏற்படுமா என்ற விளக்கத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
புரோட்டீன் சத்துக்களை பெறுவதற்கு பலரும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும், புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்ளவும் செய்கின்றனர்.
ஆனால் இவற்றினை அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் சில கேடுகளையும் விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
புரோட்டீன் அதிகம் எடுத்தால் என்னவாகும்?
உடலில் தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கு புரோட்டீன் சத்துக்கள் அவசியமாகியுள்ளது.
ஆனால் அதிக அளவு புரோட்டீன் உட்கொள்வதால், கலோரி உட்கொள்வதை குறைத்து எடை இழப்பை ஏற்படுத்துகின்றது.
மேலும் சிறுநீரகத்தை பாதிப்பதுடன், சிறுநீரின் மூலம் அதிகமான நீரிழப்பை ஏற்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல், உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
வயது மற்றும் பாலினம், சுகாதார நிலை இவற்றினைப் பொறுத்து புரோட்டீன் அளவு மாறுபடும்.
தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டால் உங்களது மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |