சாப்பிடும் போது ரொம்ப வேகமாவோ சாப்பிடுறீங்களா? மறந்தும் இந்த தவற இனி பண்ணாதீங்க
பொதுவாக தற்போது இருக்கும் அவசர உலகில் சாப்பிடுவதற்கு கூட நேரமில்லாமல் பிஸியாக இருந்து வருகின்றோம்.
பொறுமையாக ஒரு இடத்தில் அமர்ந்து நிதானமாக உணவு உண்ணும் கலையை தற்போது யாரும் பின்பற்றுவதில்லை.
சாப்பிடுவதற்காக வேலைக்குச் சென்று அதனை கூட சரியாக பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
நாம் விடும் சிறு தவறுக் கூட செரிமானம் முதல் நினைவாற்றல் வரை தாக்கம் செலுத்துகின்றன.
அந்த வகையில், நடைமுறை வாழ்க்கையில் அவசரமாக நாம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆபத்துக்கள்
1. சாப்பாட்டை சரியாக மென்று சாப்பிடாவிட்டடால் நொதி செயற்பாடு முறையாக இடம்பெறாது. ஆகவே செரிமானத்திற்கு தேவையானதை வாயில் செயல்முறை செய்து உள்ளே அனுப்புவது சிறந்தது.
2. உணவை சரியாக மென்று சாப்பிடாவிட்டால் அதன் ஊட்டச்சத்து உறிஞ்சல் சரியாக இடம்பெறாது. மாறாக சாப்பாட்டை மென்று சுவைத்து சாப்பிடுவது சிறந்தது.
3. அவசரமாக உணவு சாப்பிடும் பொழுது மனசோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இதனால் மெதுவாக சாப்பிடுவது நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.
4. அவசரமாக உணவை சாப்பிடும் பொழுது எடையில் மாற்றம் ஏற்படலாம். ஏனெனின் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சரியாக உடலுக்கு போய் சேராது.
5. ஒரு வாய் உணவில் ஏராளமான சுவை இருக்கின்றது. அவசரமாக சாப்பிடும் பொழுது சுவை விளங்காது.
6. பொறுமையாக சாப்பிடுதல் நேர்மறையான வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |