இது தெரியாமல் இரும்புச்சத்து குறைப்பாட்டை நீக்கவே முடியாது! ஏன்னு தெரியுமா?
ஊட்டச்சத்து என்பது உடல்நலத்திற்கு இன்றியமையாதது. சரிவிகித்தில் உணவை எடுத்துக்கொள்ள வில்லை என்றால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும்.
போதுமான ஊட்டச்சத்து உடல்நலத்திற்கு அடிப்படையானது எனவே "உடல்நலம் என்பது WHO-ன் கருத்துப்படி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதே ஆகும்.
தினசரி உணவை எடுத்துக்கொள்ளும் போது வைட்டமின்கள் தொடர்பில் குறிபிட்ட சில விடயங்கள் குறித்து தெளிவான விளக்கம் இருந்தால் மட்டுமே ஊட்டச்சத்து மிக்க உணவு முறையை பின்பற்ற முடியும்.
ஊட்டச்சத்துகள் எப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்புப்பட்டிருக்கின்றது என்பது குறித்து இரும்புச்சத்து குறைப்பாடு தொடர்பிலும் முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊட்டச்சத்துக்கள் -இரும்புச்சத்து
நாம் ஊட்டசத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் அளவுக்கு அதற்கு இடையில் காணப்படும் தொடர்பின் மீது கவனம் செலுத்துவது கிடையாது.
ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் வைட்டமின்கள் மற்றும் கணியுப்புக்களுக்கு இடையில் இருக்கும் தொடர்ப்பு பற்றிய பூரண விளக்கம் இன்மையே ஆகும்.
உதாரணத்துக்கு உடலில் இரும்புச்சத்து குறைவதால் உடலில் ஹீமோகுளோபின் குறைப்பாடு உண்டாகும்.
ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்தில் காணப்படும் ஒரு வகையான புரதம் ஆகும். ஹீமோகுளோபின்தான் உடல் முழுவதும் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது.
எனவே இரும்புச்சத்துக் குறைவாக, அதாவது ஹீமோகுளோபின் குறைவாக இருந்தால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது.
இந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் தான் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கின்றார்கள்.
ஆனால் இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு இரும்பு சத்து கொண்ட உணவுகளை சாப்பிடும் போது வைட்டமின் சி அடங்கிய உணவுகளை சேர்க்க வேண்டியது அவசியம்.
வைட்டமின் சி இல்லாமல் தனியாக இரும்புச்சத்தை உடலால் உறிஞ்ச முடியாது. இது குறித்து தெரியாமல் எவ்வளவு இரும்புச்சத்து நிறைந்த உணவை சாப்பிட்டாலும் அது வீண்தான்.
பொதுவாகவே ஒவ்வொரு ஊட்டச்சத்தும் மற்றொரு ஊட்டச்சத்தை சார்ந்து தான் இருக்கின்றது. உடலில் கால்சியம் உறிஞ்சப்பட வேண்டும் என்றால் வைட்டமின் டி அடங்கிய உணவுகளையும் சேர்த்து தான் சாப்பிட வேண்டும்.
அதைப்போல உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்பட்ட வேண்டும் என்றால் வைட்டமின்-சி இன்றியடையாதது.
நீங்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தாலும் வைட்டமின்-சி குறைவாக இருந்தால் உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் கிடைக்காது.
மேலும் வைட்டமின் சி நீரிலும் அதிக வெப்பதிலும் அழிவடையும் தன்மை கொண்டது. உணவில் எலுமிச்சை சேர்க்கும் போது வெப்பமாக உணவில் சேர்த்தால் வைட்டதின் சி அழிந்துவிடும்.
உணவு ஆறியபின்னரே உருமிச்சை சேர்க்க வேண்டும் அல்லது சாலட் வகைகளில் எலுமிச்சை சாறு பயன்படுத்துவது சிறந்தது.
இது போன்று வைட்டமின்களுக்கு இடையில் இருக்கும் தொடர்பை தெளிவாக புரிந்து வைத்திருந்தால் மாத்திரமே ஊட்டச்சத்து குறைப்பாட்டை முழுமையாக தவிர்க்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |