பிக்பாஸில் மோதல்! அசீமின் முகத்திரையை கிழிக்கும் கமல்.. மக்களின் கணிப்பு என்ன தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றிலிருந்து புதிய திருப்பங்கள் ஏற்படும் என மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாம் வாரத்தின் இறுதி நாள்
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து தற்போது ஆறாவது சீசன் சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி, ஐந்தாவது வாரத்தின் இறுதி நாளான இன்று, வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்ற கூற்றுக்கினங்க யார் வெளியேற்றப்படுவார் என மக்களும், போட்டியாளர்களும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டும் நேரம்.
இந்நேரத்தில் பிக் பாஸின் தொகுப்பாளரான கமலை கோபபடுத்தும் வகையில் அசீம் செயற்பட்டு வருகிறார்.
மேலும் கடந்த வாரம் ADK விடம் அசீம் கடுமையாக நடந்துக் கொண்டால் இது குறித்து கமல் அசீமிடம் கேட்டபோது, அசீமிற்கு பிக்பாஸில் விளையாடுவது குறித்து தெரியவில்லை என பதிலளித்துள்ளார்.
அசீமை வறுத்தெடுக்கும் கமல் ஹாசன்
இதன்போது கடுப்பான கமல், “நீங்கள் நினைத்தபடியெல்லாம் இங்கு விளையாட முடியாது” என கோபத்துடன் கூறியுள்ளார்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் “அசீமிற்கு ஜால்ரா தட்டிய கமலா இப்படி பேசுகிறார்” எனவும் “இனிவரும் காலங்களில் பிக் பாஸ் விறுவிறுப்பாக செல்லும்” எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.