வெளியே வந்து பார்த்த போது தான்! பிக்பாஸ்க்கு பின் மகேஸ்வரி வெளியிட்டுள்ள வீடியோ
பிக்பாஸ் வீட்டிலிருந்து இறுதியாக வெளியேறிய மகேஸ்வரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து ஐந்தாவது வாரத்தின் துவக்கத்தில் இருக்கிறோம். இதன்படி வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுகிறார்கள்.
இதிலிருந்து அசல் கோளாறு, சாந்தி, செரீனா, மகேஸ்வரி என நான்கு பேர் வெளியாகியுள்ளனர். இதில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஜிபி முத்து வெளியேறியுள்ளார்.
மகேஸ்வரியின் நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில் இறுதியாக வெளியேறிய மகேஸ்வரி வெளியிட்டுள்ள வீடியோவில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதால் எந்தவிதமான கவலையும் இல்லையென்றும், மக்களின் ஆதரவிற்கு நன்றி எனவும் இதுபோன்று எப்போதும் மக்கள் ஆதரவு வேண்டும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் மகேஸ்வரிக்கு பதிலாக வேறொரு போட்டியாளரை வெளியேற்றிருக்கலாம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Maheshwari after Eviction#BiggBossTamil6 #BiggBoss#BiggBossTamil pic.twitter.com/EOSQKiEPpd
— BIGG BOX TROLL (@drkuttysiva) November 14, 2022