பூஞ்சை தொற்றுகளுக்கு பயன்படும் Benzoic Acid Ointment
பூஞ்சை மற்றும் தோல் தொற்றுகளுக்கு மருந்தாகிறது Benzoic Acid.
பூஞ்சைகளை கொல்வதன் மூலம் இதன் தொற்றுகளை குறைக்கிறது.
பக்கவிளைவுகள்
- முகம் வீங்குதல்
- ஒவ்வாமை
- பயன்படுத்திய இடத்தில் எரிச்சல், சிவந்து போதல்
Benzoic Acid-னால் உங்களுக்கு அலர்ஜி இருந்தால் இதனை பயன்படுத்த வேண்டாம், கருவில் வளரும் குழந்தைக்கு இதை ஆபத்தை உண்டு பண்ணலாம், எனவே கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பம் தரிக்க திட்டமிடும் பெண்கள் மருத்துவரிடம் கட்டாயம் தெரிவிக்கவும்.
தாய்ப்பாலூட்டும் பெண்களும் கவனமுடன் இருக்க வேண்டும், 18 வயதுக்கு குறைவானவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
கண், காது, மூக்கு, வாயில் படாமல் பார்த்துக்கொள்ளவும், ஒருவேளை நடந்தால் உடனடியாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து விடவும்.
ஒருநாளைக்கு இரண்டு முறை வீதம் பயன்படுத்தவும், பயன்படுத்தும் முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.
பயன்படுத்தும் முன்னரும் பின்னரும் உங்கள் கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
சுத்தமான காட்டன் துணி கொண்டு பயன்படுத்திக் கொள்ளுங்கள், 7 நாட்களுக்கு மேலும் சரியாகவில்லையென்றால் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
அறை வெப்பநிலையில் பாதுகாத்து வைப்பது சிறந்தது, குழந்தைகள் கைக்கு எட்டாத வண்ணம் பாதுகாக்கவும்.
குறிப்பு- எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது.