அனைத்து மொபைல்களுக்கு இனி ஒரு சார்ஜர் வேண்டும்! அதிரடி மாற்றம்
இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஒவ்வொரு ப்ராண்ட் மொபைல்களுக்கு ஏற்றவாறு சார்ஜ் மாறுபடும். அதிலும் தற்போது வரும் ஸ்மார்ட் போன்களில் சார்ஜ்ரே இல்லாமல் போன்கள் விற்பனைக்கு வருகிறது.
அதிலும், டைப் சி வரை ஸ்மார்ட்போன்களின் சார்ஜ் நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மொபைல் போனை விற்றுவிட்டு வேறு மொபைல் போன் வாங்கினால் புதிதாக சார்ஜர் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால், அனைத்து மொபைல்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து வகை மொபைல் போன்கள் மற்றும் கையடக்க மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜரை ஏற்றுக் கொள்வதற்கான தொழில் நுட்பத்தை ஆய்வு செய்ய தொழில்துறை தொழிலதிபர்களுடன் மத்திய அரசு கூட்டத்தை கூட்டியது.
ஏற்கனவே, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய பகுதிகளில் இந்த விதிமுறை ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் சாத்தியப்படுத்த வேண்டும் என தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டது.
